லாஸ் ஏஞ்செல்ஸில் நடந்த சர்வதேச திரைப்படவிருது விழாவில் திரையிடப்பட்ட உத்தமவில்லன் 5 விருதுகளை அள்ளியது. இதையடுத்து இன்று காலை நடிகர் சங்க நிர்வாகிகள் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசனின் வீட்டுக்கு சென்று கமல்ஹாசனுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர் .இச்சந்திப்பில் நடிகர் சங்கத் தலைவர் நாசர் ,அஜய் ரத்தினம், பூச்சி முருகன்,சுரேஷ்,மனோபாலா,ராஜேஷ்,உதயா,சோனியா,ரோகினி,உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.