நாம் முன்னர் சொன்னதை போல நடிகர் சங்கத்துக்கும் தமிழக அரசு தனி அதிகாரியை நியமனம் செய்திருக்கிறது.
இதற்கு மூல காரணமே விஷால்தான் என்கிறார்கள்.
நடிகர் சங்கம்,தயாரிப்பாளர் சங்கம் ஆகியவைகளில் முக்கிய பதவிகளில் இருந்து கொண்டு அரசினை விமர்சிப்பது,தேர்தலில் எதிர்த்துப் போட்டியிடுவது என அதிமுக எதிர்ப்பு நிலையை விஷால் மேற்கொண்டார். அரசுக்கு ஆதரவாக செயல்படாத அமைப்புகள் மீது அரசு கோபம் கொள்வது என்பது ஜனநாயக விரோதமானது என்றாலும் அந்த நிலையைத்தான் அதிமுக அரசு கையில் எடுத்துக் கொண்டிருக்கிறது.
போதாக்குறைக்கு சங்க நிர்வாகிகளில் சிலருக்கு விஷாலின் போக்கு பிடிக்கவில்லை.அவர்களுடைய எதிர்ப்பும் முக்கியக் காரணமாகும். அரசுக்கு விரோதமான போக்கினை கைக் கொண்டதால் முதலில் தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஆணி அடிக்கப்பட்ட்து.
தற்போது நடிகர் சங்கம்.
அரசு உதவி தலைமைப் பதிவுத்துறை அதிகாரி கீதா என்பவரை நடிகர் சங்கத்தின் தனி அதிகாரியாக அரசு நியமித்திருக்கிறது.