“நான் பிஜேபி தலைவர் யாரையும் சந்திக்கல. காவி சாயம் பூசுரதுக்கு முயற்சி நடக்குது.திருவள்ளுவரும் மாட்டார்,நானும் மாட்ட மாட்டேன் “என்று ரஜினிகாந்த் சொன்னது இன்றைய ஹாட் நியூஸ். ( காவிக்கு காவி பூச முடியுமா?)
ஆனால் “திருவள்ளுவர் ஆத்திகர் தான்,அவர் நாத்திகர் இல்லை “என்று அவர் சொன்னதுதான் விவாதப் பொருள் ஆகி இருக்கிறது. “அதை யாரும் மறுக்க முடியாது” என்று சொன்ன ரஜினி எந்த அடிப்படையில் சொன்னார் என்பதையும் சொல்லியிருக்கலாம்.
“நாட்டில் எவ்வளவோ பிரச்னைகள் இருக்கிறபோது அதை விட்டு விட்டு வள்ளுவர் பிரச்னையை கையில் எடுப்பது கண்டனத்துக்குரியது “என்று சொன்னார்.
உள்ளாட் சி தேர்தலில் நிற்கப்போவதில்லை என்பதையும் வெளிப்படுத்தினார்.