அயோத்தியில் ராமர் கோவில் விவகாரம் தொடர்பாக இன்று காலை உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
இது குறித்து பலர் தங்களின் கருத்துகளை வெளியிட்டிருக்கிறார்கள்.
ரஜினிகாந்த்
“அயோத்தி நில வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை நான் மதிக்கிறேன் வரவேற்கிறேன் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் .இந்திய நாட்டின் வளர்ச்சிக்காக மத பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்”
சீமான்
அயோத்தி வழக்கில் வழங்கப்பட்டது தீர்ப்புதானே ஒழிய, நீதியல்ல! பாபர் மசூதி இடிப்பை சட்டவிரோதம் எனும் உச்ச நீதிமன்றம், இடித்தவர்களுக்கு எவ்விதத் தண்டனையும் வழங்காதது பெருத்த ஏமாற்றம்! பாபர் மசூதி இடிப்பென்பது இசுலாமிய இறையியலுக்கு மட்டுமல்லாது, இந்தியாவின் இறையாண்மைக்கும் எதிரானது!
டி .டி .வி.தினகரன்.
அயோத்தி வழக்கில் நாட்டின் உயரிய சட்ட அமைப்பான உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை, தீர்ப்பாக மட்டுமே கருதி அனைத்துத் தரப்பினரும் அணுகிட வேண்டும்.
மு.க ஸ்டாலின்
உச்சநீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வே #AYODHYAVERDICT வழங்கியதற்குப் பிறகு, அதை எந்தவித விருப்பு-வெறுப்புக்கும் உட்படுத்தாமல், மதநல்லிணக்கம் போற்றி, நாட்டின் பன்முகத்தன்மைக்கு எவ்விதச் சேதாரமும் ஏற்பட்டுவிடாமல் எச்சரிக்கை உணர்வுடன் முன்னெடுத்துச் செல்வார்கள் என்று நம்புகிறேன்.