தமிழில் மட்டுமல்ல,மலையாளத்திலும் முரட்டுத் தனமான கேரக்டர்களில் நடிப்பவர் விநாயகன். திமிரு,மரியான்,சிலம்பாட்டம்,துருவ நட்சத்திரம் உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களிலும் ,மலையாளப்படங்களிலும் வில்லனுக்கு கைத்தடியாகவே நடித்து வருபவர்.
மாடல்,மற்றும் சமூக சேவகியான மிருதுளா தேவி,இவரது அம்மா இருவரையும் ஆபாசமாக திட்டி ரகளை செய்தாராம்.
மிருதுளா தேவி கொடுத்த புகாரை பதிவு செய்த கேரளா போலீசார் விநாயகனை கைது செய்து விசாரித்து வந்தனர். ஜாமினில் வந்த விநாயகன் மீதான புகாருக்கு ஆதாரம் இருப்பதாக சொல்லி தற்போது கல்பேட்டா போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறார்கள்.