“எனக்கு காவிச்சாயம் பூச பார்க்கிறார்கள்,எனக்கோ ,திருவள்ளுவருக்கோ காவிச்சாயம் பூச முடியாது” என்று ரஜினி யாரை மனதில் நினைத்துச் சொன்னாரோ ,அது அவருக்கு மட்டும்தான் தெரியும்.
அன்றைய பேட்டியில் “தமிழகத்தில் பெரிய வெற்றிடம் இருக்கிறது”என்பதையும் சொல்லி வைத்தார். தமிழக அரசியலில் பெரிய ஆளுமைகளாக இருந்த கலைஞர் கருணாநிதி,ஜெயலலிதா இவர்களின் மறைவைக் குறித்ததாக கூட இருக்கலாம்.
ஆனால் முதல் அமைச்சர் பழனிச்சாமி வெற்றிடம் என்பதெல்லாம் இல்லை என்று சொல்வதற்கு பதிலாக “வீட்டில் இருந்து பேட்டி கொடுப்பவரெல்லாம் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவாக ஆகி விட முடியாது”என சொல்லி இருக்கிறார்.
வீட்டு வாசலில் இருந்து பேட்டி கொடுப்பவர்கள் ரஜினி, கமல் இருவர்தான். இவர்களையா தாக்குகிறார் எடப்பாடியார்?