மறுப்பும் இல்லை, அறிவிப்பும் இல்லை என்கிற அளவில் பொன்னியின் செல்வன் படத்தைப் பற்றிய செய்திகள் எப்படியாவது வந்து விடுகின்றன. இந்த படத்தை இயக்கும் மணிரத்னம் இதுவரை நட்சத்திர தேர்வு பற்றி அறிவிக்கவில்லை.ஆனாலும் மீடியாக்கள் தங்களின் சோர்ஸ்களை வைத்துக் கொண்டு ,சில பி.ஆர்.ஓ,தரும் செய்திகளை அடிப்படையாக கொண்டும் தகவல்களை தருகிறார்கள்.
இப்படத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, அனுஷ்கா, கீர்த்தி சுரேஷ், மோகன் பாபு ஜெயம் ரவியின் மகன் ஆரவ் ரவியும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஆடை அமலாபாலை அழைத்து ஆடிஷன் நடந்ததாகவும் அது மணிரத்னத்துக்கு மன நிறைவைத் தரவில்லை ,அதனால் அமலா பாலை வேண்டாம் என சொன்னதாகவும் சொல்கிறார்கள்.
அமலாபாலின் இன்ஸ்ட்ராகிராமில் வந்திருக்கிற கவர்ச்சிப் படங்களை பார்த்து விட்டு மணிரத்னம் முடிவை சொல்லியிருக்கலாம்.