ஆட்டப்போகுது அசைக்கப்போகுதுன்னு எதிர்பார்த்த புயல் ஓசையின்றி ஒதுங்கி விடுவதை போல தீபாவளியும் கடந்து விட்டது.
அடுத்தது பொங்கல். இது தமிழர் திருவிழா.
தமிழர் புத்தாண்டு தொடங்கும் நாளில் திரைப்பட ரசிகர்களுக்கு சர்க்கரைப் பொங்கல், கற்கண்டுப் பொங்கல் என இனிப்பு பொங்கல்களை வழங்கப் போகிறார்கள்.
ஆனால் சரியான போட்டி.
ரஜினிகாந்த்,சூர்யா,தனுஷ் ஆகியோரின் படங்கள் பொங்கல் விருந்தாக அமையும் என எதிர்பார்க்கிறார்கள்.
ஏ ஆர் முருகதாஸின் தர்பார் படம். ரஜினிகாந்த் நடித்திருக்கிறார்.போலீசாக.!
சுதா கொங்கரா இயக்கத்தில் ‘சூரரைப் போற்று ‘.சூர்யா நடித்திருக்கிறார்.
இந்த இருபடங்களும் பொங்கல் ரிலீஸ் என உறுதியான நிலையில் தனுஷின் பட்டாசு படமும் வெளியாகலாம் என்கிறார்கள்.துரை .செந்தில்குமார் இயக்கியிருக்கிற படம்.
மாமனார் படத்துடன் மருமகன் மோதுவாரா என்கிற கேள்விக்குறியும் தொங்குகிறது. பேட்ட வெளியான போது போட்டியாக விசுவாசத்தை இறக்கிய சத்யஜோதி தியாகராஜன்தான் பட்டாஸ் தயாரிப்பாளர்.
அஜித் வற்புறுத்தியதால்தான் அப்போது விசுவாசம் வெளியாகியது என்கிறார்கள். ஆனால் தனுஷ் வற்புறுத்துவாரா என்பதுதான் கேள்விக்குறி?
மாமனாருடன் மோதுவதை குடும்பத்தினர் எப்படி எடுத்துக் கொள்வார்கள் ?