எங்கேயோ, எப்போதோ படித்தது.
- காதல் பிடிக்குள்
- சிக்கிக் காற்றும்
- திணறுகிறது.
- பிடியை தளர்த்து
- பிழைத்துப் போகட்டும்.
எவரைத்தான் இந்த காதல் விட்டு வைத்திருக்கிறது.விரட்டி விரட்டி அடிக்கவில்லையா?
அண்மைக்கால இளைய சமுதாயத்துக்கு தெரிந்த காதலர்கள் விக்னேஷ் சிவன் -நயன்தாரா.
காதலுக்குள் சிக்கி சிம்பு,பிரபுதேவா என நயன் கடந்து செல்லவில்லையா?
ஆழ்ந்த காதல் என அமிழ்ந்த சிம்பு-ஹன்சிகா நேசம் திடீரென மோசம் போகவில்லையா?
ஆனால் கடல் கடந்து பிரியங்கா ஆங்கிலேயரை மணந்து கொள்ளவில்லையா?
நெடிய வருடங்கள் காத்திருந்து தீபிகா படுகோனே அவரது காதலரை கரம் பிடிக்கவில்லையா?,
முதல் கணவனை விவாகரத்து செய்து விட்ட மலைகா அரோரா மறுமணத்துக்கு தயாராகவில்லையா,தன்னைவிட 12 வயது இளையவர் மீது ஈர்ப்பு ஏற்படவில்லையா?
ஆக காதலில் சாதனையும் வேதனையும் நாணயத்தின் இரு பக்கம்.
ஆக உண்மையான காதலுக்கு என்றுமே மரணம் இல்லை.
மறைந்த நடிகர் முரளியின் பிள்ளைகள் அதர்வா,ஆகாஷ்.
இவர்களில் இளையவர் ஆகாஷ் லயோலா மாணவர். இயக்குநர் ஆக வேண்டும் என்பது இவரது இலக்கு.
தளபதி 64 படத்தின் தயாரிப்பாளர் பிரிட்டோவின் நெருங்கிய உறவினர் எஸ்.ஏ.சந்திரசேகர். பிரிட்டோவின் மகள் சினேகா. இவருக்கு இயக்குநர் ஆக வேண்டும் என்பது ஆசை. அப்பாவின் பணத்தில் படமும் எடுத்தார்.
படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை.
இவருக்கும் ஆகாஷுக்கும் நெடுநாள் காதல். இந்த காதல் விரைவில் கை கூடும் என்கிறார்கள். விஜய்யின் தலைமையில் இந்த சீர்திருத்த திருமணம் நடக்கும் என்கிறார்கள்.