கவுரி ஷிண்டே.
‘இங்கிலீஸ் விங்கிலீஷ் ‘படத்தின் இயக்குநர் .
இவர் ஒரு விளம்பர படத்தை இயக்கப்போகிறார்.கரண் ஜோகர்தான் நடிக்கிறார்.
“ஓரின சேர்க்கையை இயல்புடன் படமாக்க வேண்டும் “என்பது இவரது ஆசை.
படங்களில் வந்து கொண்டிருக்கிற செக்ஸ் இனி விளம்பரங்களிலும் வரப்போகிறது.
எதையெல்லாம் கலாசாரம் என இதுவரை சொல்லிக்கொண்டு வருகிறோமோ அதையெல்லாம் உடைத்து நொறுக்கப் போகிறார்கள் .
உதாரணமாக தாலி கட்டாமல் ஒன்றாக வாழ்கிற மேலை நாட்டு பழக்கத்தை நியாயப் படுத்தும் வகையில் டீ விளம்பரம் வந்திருக்கிறது.
அப்பா அம்மா இருவரும் மகனின் பிளாட்டுக்கு வருகிறார்கள்.
மகன் வரவேற்கிறான் .
“அம்மா…. இது பல்லவி,நாங்க ஒண்ணா இருக்கிறோம் “என அங்கிருந்த ஒரு பெண்ணை அறிமுகப்படுத்துகிறான் .
லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்வதை இப்படி காட்டுகிறார்கள் அந்த விளம்பரத்தில்.!
ஆக தாலி கட்டாமல் வாழ்வதும் ஒரு நாகரீகம் என்பதை நமது வீட்டு முற்றத்தில் வந்து சொன்னவர்கள் ,இதைப்போல ஷேம் செக்சும் நியாயம் தான் என்பதை காட்டப்போகிறார்கள்.
இதுதான் இந்திய நாகரீகமா?