பயணம் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வு தரும். அப்படியான ஒரு பயணத்தை இயற்கை எழில் கொஞ்சும் நகரான கோவாவின் கடற்கரைகளில் மேற்கொண்டுள்ளார் ஆஷிமா நாவல். ( கோவாவில் தனியாக சுற்றினால் போர் அடிக்கும்!)அப்பயணம் பற்றி அவர் பகிர்ந்துகொண்டது….
“மனதை ஒருமுகப்படுத்த, உடலை புத்துணர்வூட்ட ஒரு சிறு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டேன். கடற்கரை பயணம் என்பது ஆன்மாவின் தியானம் என்பார்கள்
இயற்கையின் எழிலில் கலந்து மனதை ஒருமுகப்படுத்திகொள்ள என்னைப் போன்ற நடிகர் நடிகைகளுக்கு பயணங்களே அற்புத வாய்ப்பு. உற்சாகம் தரும் புத்தம் புது நடனக் கலைகள் கற்க, ஓய்வில் உடலை புதுப்பித்துக்கொள்வதற்கே இப்பயணம்.
என் அம்மா எனது வாழ்வின் தோழி இப்பயணத்தில் என்னுடன் இணைந்திருந்தார். நாங்கள் பல புதிய இடங்களை கண்டடைந்தோம். பல புது மனிதர்களை சந்தித்தோம். கடல் உணவுகள் பலவற்றை சுவைத்தோம். ஓய்வில் தியானம், கடற்கரையில் நீச்சல், புதிய நடன வகைகளை முயற்சித்தல் என இப்பயணம் இனிமையான அனுபவம். இயற்கை எழில் கொஞ்சும் நீல நிறக் கடல், பொன்நிற வெய்யில், பசுமை போர்த்திய மர நிழல் ஆகியவற்றோடு நான், அண்டத்தில் ஒருத்தியாய் கலந்து விட்ட உணர்வை அது தந்தது. அல்லது அப்படியாக நான் உணர்ந்தேன். கடவுள் தந்த வரமாய் அன்பின் வடிவாய் என் தாய் என்னுடனேயே இருந்தார். இப்பயணத்தில் நாங்கள் டாட்டுவையும் முயற்சித்தோம்.
காற்றில் ஈரத்தில் கலந்திருக்கும் உப்பு, நம் உடலிலும் முடியிலும் கலந்திருக்கும். அது பரந்து விரிந்திருக்கும் நீல நிற கடலின் ஒரு துளியாகவே கருதினேன்.”என்கிறார்.
.