சொந்தப்படம் எடுத்து சூடு பட்டவர் அதர்வா. ‘செம்ம போதை ஆகாதே ‘ என்பது இவரது பட டைட்டில். ஹீரோவின் படம் என்பதால் ரிஸ்க் இருக்காது என நம்பி நாலரைக் கோடிக்கு மதியழகன் என்கிற தயாரிப்பாளர் வாங்கினார்.
மூனரைக் கோடி அட்வான்ஸ்.
ஏழரை எங்கே உட்கார்ந்திருந்தான் என்பது தெரியவில்லை.
படம் ரிலீஸ் ஆகும் நேரத்தில் அதர்வா மீது மோசடி புகார் வந்து விழுந்தது. .இதனால் முதல் நாள் ,முதல் இரண்டு காட்சிகள் தடை பட்டது.
இதன் காரணமாக தனக்கு நட்டமேற்பட்டதாக தயாரிப்பாளர் மதியழகன் நடிகர் சங்கத்தில் புகார் செய்தார்.
விஷால் தலைமையில் பஞ்சாயத்து நடந்தது.
அதர்வாவுக்கு வரவேண்டிய பணத்தில் 45 லட்சத்தை மதியழகன் கொடுக்க வேண்டும் என்றும் அதர்வா தயாரிப்பாளருக்கு சம்பளம் இல்லாமல் ஒரு படம் நடித்துக் கொடுத்து விட வேண்டும் என்றும் மத்தியஸ்தம் செய்யப்பட்டிருக்கிறது,
ஆனால் தனக்கு ஒரு படம் நடித்துக் கொடுப்பதற்கு அதர்வா மறுத்து வருவதாக போலீஸ் கமிஷனரிடம் மதியழகன் புகார் செய்திருக்கிறார்.