மிக மிக அவசரம் படத்துக்கு போதுமான தியேட்டர் கொடுத்தாங்கன்னு மகிழ்ச்சியில் இருந்தார் தயாரிப்பாளர்,இயக்குனர் சுரேஷ் காமாட்சி . தியேட்டர்காரர்களுக்கு நன்றி தெரிவித்து கூட்டம் நடத்தினார்,
தியேட்டர் சங்க அதிபர்கள் அபிராமி ராமநாதன், பன்னீர் செல்வம் ஆகியோரும் கலந்து கொண்டு சின்ன படங்களினால்தான்யா எங்களுக்கு ஆதாயம்னு தட்டிக் கொடுத்தாங்க. ஆனா இப்படி காலை வாருவாங்கன்னு தெரிஞ்சிருந்தா நன்றி அறிவிப்பு கூட்டமே நடத்திருக்க மாட்டார் சுரேஷ் காமாட்சி.
இதோ அவரது வயிற்றெரிச்சல் !
“கொடுக்கிற மாதிரி கொடுப்பாங்களே..அப்படித்தான் ஆகிப்போச்சு.. திரையரங்குகள் #மிகமிகஅவசரம் படத்திற்கு கிடைத்தது. காலைல ஷோ, மத்தியான ஷோவா கொடுத்தா யார் சார் தியேட்டருக்கு வருவாங்க? நான் விஜய் சார்,அஜீத் சார் படமா பண்ணியிருக்கேன்? சின்ன படங்களை சாவடிக்கிறாங்க”
என குமுறி இருக்கிறார்.