2019 ஆம் ஆண்டு டிவிட்டரில் முதல் இடம் யாருக்குத் தெரியுமா?
“தெறிக்க விடலாமா?”ன்னு அதகளம் பண்ணியவர்கள் தல ரசிகர்கள் மட்டுமே என்கிறது டிவிட்டர்.
இரண்டாவது இடம் பாராளுமன்றத்தேர்தல்
மூன்றாவது இடம் உலக கிரிக்கெட் போட்டி…
விசுவாசம் படத்துக்காக அஜித்குமாரின் ரசிகர்கள் பகிர்ந்து கொண்டவைகள்தான் இந்திய அளவில் முதல் இடத்தை பெற்றிருக்கின்றன.
பரபரப்பான பாராளுமன்றத் தேர்தலை பின்னுக்குத் தள்ளி முன்னிலையை பெற்றிருக்கிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினி, தளபதி விஜய் ஆகியோர் மன்றங்கள் வைத்து ரசிகர்களை வளர்த்து இருக்கிறார்கள். ரஜினி கட்சி ஆரம்பிக்க இருக்கிறார்.இவர்களுக்கு கொடிகளும் இருக்கின்றன.
ஆனால் மன்றங்களை கலைத்து விட்டு ,கருத்துகளும் சொல்லாமல் பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் தன் வீடு உண்டு,தானுண்டு என வாழ்ந்து கொண்டிருக்கிற அஜித்குமாருக்கு மட்டும் எப்படி ரசிகர்கள் அலை அலையாக வந்து குவிகிறார்கள். இமயத்தின் அளவுக்கு செல்வாக்கு உயர்ந்து இருப்பதெப்படி? சூப்பர் ஸ்டார் என்று இந்திய அளவில் கொண்டாடப்படுகிற ரஜினி, முதல்வர் ஆகிற தகுதி இவருக்கு தான் என சொல்லப்படுகிற விஜய் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி விட்டு அஜித் முதலிடம் பெற்றிருக்கிறார் என்பதை சாதாரணம் என ஒதுக்கி விட முடியாது.
வரப்போகிற தேர்தலில் மிகப்பெரிய பொறுப்பு தல ரசிகர்களுக்கு இருக்கிறது.