தளபதி விஜய்யின் 65 ஆவது படத்தை மகிழ்திருமேனி இயக்குவார் என்கிற செய்தி நேற்று பரவலாக அடிபட்டது.
அதற்கு விஜய்யின் வட்டத்திலிருந்து ஒரு செய்தி ….
“தளபதி ஒரு படத்தை முடிக்காம அடுத்த படத்துக்கு போக மாட்டார். அவரது முழுக்கவனமும் நடிப்பில்தான் இருக்கும். ஆகவே வெளிவந்திருக்கிற செய்தி தவறானது “
மகிழ்திருமேனி தரப்பு என்ன சொல்கிறது.?
“எங்களுக்கு அப்படி எதுவும் தெரியாது. ஆனால் அந்த செய்தி உண்மையானால் எங்களுக்கு மகிழ்ச்சியே.தற்போது கை வசம் படம் இருக்கிறது.”