அலுத்து களைத்து அக்கடான்னு படுத்தா பக்கத்தில கிடந்த புருஷன் காலைத் தூக்கிப் போட்டானாம்.
அந்த கதையாகிப் போச்சு நம்ம வைகைப் புயல் வடிவேலுவின் கதை.!
இப்பத்தான் எல்லாம் செட்டாகி வருதுன்னு ஆறுதலா செய்தி வந்தால் அதைத் தொடர்ந்து கத்தியும் கம்புவுமால்ல வந்திட்டிருக்கு. அம்மாடியோவ்…இன்னும் என்னென்ன கெளம்புமோ தெரியலியே ராசா.!
“நானும் நீயும் நடுவுல பேயும்”னு ஒரு படம் .தயாரிப்பாளர்,நடிகர் ஆர்கே !
இந்த படத்தில நடிக்கிறதுக்கு வடிவேலுக்கு ஒரு கோடி ரூபா அட்வான்சா கொடுத்தாராம்.
கொடுத்த காசுக்கு வந்து கும்மி அடிச்சிட்டுப் போயான்னு கூப்பிட்டா ,கதை சரியில்ல ,கதையை மாத்து .நான் நடிக்க வரமாட்டேன்னு வைகைப் புயல் சொல்லிட்டார்னு தயாரிப்பாளர் ஆர்கே குமுறிக்கிட்டு இருக்கார். ஊதக் காத்தா போயிடும் போலிருக்கே வைகைப்புயல்.!
“எனக்கு செட்டில் பண்ணலேன்னா வடிவேலு நடிக்கிற எந்த படத்தையும் ரிலீஸ் பண்ணவிடமாட்டேன் “னு ஆர்கே திட்டவட்டமா சொல்லிட்டார்.