“தமிழ்நாட்டில் பவர் புல்லான தலைமை இடம் காலியாகத்தான் இருக்கிறது !” என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சொன்னதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ,தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள்.
சக்தி வாய்ந்த கலைஞர் கருணாநிதி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் மறைவுக்குப் பிறகு ஒரு வெற்றிடம் ஏற்பட்டிருப்பது உண்மைதான்.! அவர்கள் இருவரும் இருக்கும் வரை மத்திய அரசு தனது திணிப்புகளை நிறுத்தியிருந்தது. மாநில அரசுக்கு ஒரு மரியாதை இருந்தது. தற்போது மாநில அரசு தனது பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக மத்திய அரசு சொல்வதை எல்லாம் எவ்வித எதிர்ப்பும் இன்றி ஏற்றுக் கொள்கிறது. வழக்குகளுக்கு அஞ்சி திமுகவும் மென்மையான போக்கினையே கையாளுகிறது. எப்பேர்ப்பட்ட ஆள் ப.சிதம்பரம். அவரையே திகார் சிறையில் தள்ளி ஏழு கிலோ எடையை இறக்கி விட்டார்களே!
இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டுதான் வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக ரஜினி சொல்லியிருந்தார்.
இதை முக அழகிரி வரவேற்றிருக்கிறார். இவருக்கு திமுகவை எதிர்க்கவேண்டும் என்கிற ஒற்றைக் கொள்கையைத் தவிர வேறு எதுவும் கிடையாது. பங்காளி சண்டை. திமுகவில் இவரை ஓரம் கட்டிவிட்டதால் ஏற்பட்டிருக்கும் விரக்தி.!
இதனால்தான் “வெற்றிடம் ஏற்பட்டிருப்பது நிஜம்தான்.அந்த இடத்தை ரஜினியால் மட்டுமே நிரப்ப முடியும்”என்பதாக சொல்லியிருக்கிறார்.