விஜய் தற்பொழுது அட்லி இயக்கும் 59-வது படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்தப்படம் முடிவடையும் நிலையில் உள்ளது. இருப்பினும் டைட்டிலை அறிவித்தபாடில்லை. இந்நிலையில் விஜய்யின் 60வது படம் குறித்த அறிவிப்புகள் வெளியாகிவிட்டன.
‘அழகிய தமிழ் மகன்’ படத்தை இயக்கிய பரதனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ளார் விஜய். பரதனின் கதையில் நடிப்பது என முன்கூட்டியே முடிவு செய்யப்பட்டாலும், அவருடைய இயக்கத்தில் விஜய் நடிப்பதற்கு முதலில் தயக்கம்காட்டினார். காரணம் அழகிய தமிழ் மகன் படத்தின் பிளாப் தான். இதனால் முதலில் வேறொரு முன்னணி இயக்குநரிடம் இந்த கதையை கொடுத்து இயக்க சொல்லலாம் என முடிவு செய்தனர். ஆனால், திடீர் திருப்பமாக பரதனையே இயக்க சொல்லிவிட்டார் விஜய்.
தற்பொழுது, அந்த படத்திற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார் பரதன். அடுத்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கப்போவது குறித்து தகவல்கள் கசிந்துள்ளது. இதுவரை விஜய்யுடன் நடிக்காத வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவரை நடிக்கவைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளதாம். அதனால், கதாநாயகி வேட்டை நடைபெற்று வருகின்றது. அந்த நடிகை யாராக இருக்கும் என்பது தான் கோடம்பாக்கத்தின் இன்றைய ‘ஹாட் டாபிக்’. இந்த படத்தை அஜித்தின் வீரம் படத்தை தயாரித்த விஜயாபுரொடக்ஷன்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது.