இதுவரை சந்தானம் நடித்த படங்களை விட மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகவுள்ள படம் ‘டிக்கிலோனா’.
‘கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ்’ சார்பாக கோட்டப்பாடி ஜே.ராஜேஷும், ‘சோல்ஜர் பேக்டரி’ சார்பில் சினிஸும் மிகப்பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரிக்கின்றனர்.
சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது. இதில் நடிகர் சந்தானம், அவருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகைகள் அனகா, ஷிரின், தயாரிப்பாளர்கள் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் கோட்டப்பாடி ஜே. ராஜேஷ், சோல்ஜர் பேக்டரி சினிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சந்தானத்தோடு இந்திய அணியின் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தமிழ் சினிமாவின் எனர்ஜிடிக் காமெடியன் யோகிபாபு, வில்லத்தனம் கலந்த காமெடியால் ஆடியன்ஸை சுவாரசியப்படுத்தும் ஆனந்த்ராஜ், முனிஷ்காந்த், நிழல்கள் ரவி, சித்ரா லெட்சுமணன், மொட்டை ராஜேந்திரன், ஷாரா ஆகியோர் நடிக்கிறார்கள்.
சந்தானம் மூன்று வேடங்களில் நடித்து வரும் இப்படத்தை பல வெற்றிகரமான படங்களுக்கு திரைக்கதையில் உதவியாக இருந்த கார்த்திக் யோகி இயக்குகிறார். 2020 ஏப்ரலில் சம்மர் கொண்டாட்டமாக வெளியாகிறது.