சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவிக்க, அவரது வீட்டின் முன்பு ரசிகர்கள் பெருமளவில் திரண்டனர். இதை தொடர்ந்து , ரஜினி வீட்டை விட்டு வெளியே வந்து, ஓர் மேடையில் நின்று, ரசிகர்களை பார்த்து கை அசைத்தார். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்த பின் வீட்டிற்குள் சென்று விட்டார். புத்தாண்டு தினத்தில் நேரில் தங்கள் தலைவரை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.