சூர்யாவின் ‘2டி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனமும், குனீத் மோங்காவின் ‘சிக்யா’ நிறுவனமும் இணைந்து தயாரித்து வரும் படம் ‘சூரரைப் போற்று’.
கர்நாடக மாநிலத்தின் ஹாசன் மாவட்டத்திலுள்ள கோரூர் எனும் சிறிய கிரமத்தில் பிறந்து இந்திய ராணுவத்தில் பல சாதனைகளை செய்தவர் ஜி.ஆர்.கோபிநாத். இவரது வாழ்க்கையை மையப்படுத்தி தான் ‘சூரரைப் போற்று’ படம் உருவாகி வருகிறது.
இந்தப் படத்தில் ஜாக்கி ஷெராஃப், தெலுங்கு நடிகர் மோகன் பாபு, முக்கிய கதாபாத்தில் நடித்துள்ளனர்.
படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மும்மரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில்’ மாறா’ தீம் மியூசிக் பாடலை நடிகர் சூர்யா தனது சொந்தக் குரலில் பாடியதை ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனால் சூர்யாவின் ரசிகர்கள் உற்சாகத்தின் மிகுதியால் அந்த டிவீட்டை இந்திய அளவில் ட்ரென்ட் ஆக்கி வருகின்றனர்.
சுதா கொங்காரா இயக்கிய ‘இறுதிச் சுற்று’ படத்தின் மெகா ஹிட்டாலும் சூர்யா சுதா கொங்காரா இணையும் முதல் படம் என்பதாலும் ‘சூரரைப் போற்று’ படத்திற்கு ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினரிடையேயும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.