நடிகை நயன்தாரா இன்று தனது 35-வது பிறந்தநாளை காதலன் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் அமெரிகாவில் கொண்டாடி மகிழ்ந்தார். அந்த புகைப்படங்களை இருவரும் தங்களது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு இந்த வானமும், நயனின் புன்னகையும்…. நியூயார்க் அழகாக உள்ளது என பதிவிட்டுள்ளார்.இப்புகைப்படங்கள் வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.
ரஜினியுடன் தர்பார்படத்தை முடித்தகையோடு அமெரிக்கா சென்றுள்ள நயன்தாரா, அடுத்து விக்னேஷ்சிவன் தயாரிக்கும் நெற்றிக்கண் படத்தில் நடிக்கிறார். இதில் பார்வையற்ற மாற்றுத் திறனாளியாக அவர் வேடம் ஏற்கிறார்.இப்படம் கொரிய நாட்டு படமான ‘பிளைன்ட்’ படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
இது நயன்தாரா நடிக்கும் 65 வது படமாகும்.தொடர்ந்து, ஆர்.ஜெ.பாலாஜி இயக்குனராக களமிறங்கும் மூக்குத்தி அம்மன் படத்தில் அம்மன் வேடமேற்கிறார்.