நயன்தாரா ஓர் அசைவப்பிரியை.
அதிலும் பாம்பூ சிக்கன். ஹைதராபாத்திலிருந்து வாங்கி வரச்செய்து சாப்பிடுவார். விமானத்தில் சென்று வாங்கி வருவார். நம்பிக்கைக்குரியவர் ஒரு வேலையாள் இருக்கிறார்.
விக்னேஷ் சிவனுக்கும் பிடிக்கும்.! அண்மையில் தனது பிறந்த நாளைக்கு கொண்டாடுவதற்காக வெளிநாடு சென்றிருந்த அவர் அசைவ உணவுகளை விரும்பிச் சாப்பிட்டதாக சொல்கிறார்கள்.நயனுக்கு 35 வயது நடக்கிறது.
ஆனந்தமாக ,மகிழ்ச்சிகரமாக இன்னும் என்னென்ன வார்த்தைகள் இருக்கிறதோ அத்தனையையும் அள்ளிப் போட்டுக் கொள்ளுங்கள்.
அவர்கள் வாழ்க்கை.அவர்களின் காசு. கொடுத்து வைத்தவர் விக்னேஷ் சிவன் என்கிறார்கள்.
இதற்கிடையில்தான் மற்றோர் செய்தி.
நாற்பது நாள் விரதம். அசைவ உணவு தவிர்த்தல்.
எதற்காகவாம்?
ஆர்ஜே பாலாஜியின் ‘மூக்குத்தி அம்மன் ‘ படத்தில் நடிப்பதற்காக.!
பரவாயில்லையே!