டாக்டர் பட்டம் வாங்கிய டாக்டர் கமல்ஹாசன் சென்னை திரும்பியதும் பத்திரிகையாளர்களிடம் பேசினார்.
“எனக்கு ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் கையால் டாக்டர் பட்டம் பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது.
அரசியலிலும் நானும் ரஜினியும் இணையும் அதிசயம் நடக்குமா எனக்கேட்கிறார்கள்.
அதுக்கு அவசியமே இல்லை.
நாங்க இருவரும் 44 வருஷமா இணைந்து தான் இருக்கிறோம். அதில் ஒன்னும் அதிசயம் இல்லை.இப்ப வேலை தான் முக்கியம்.
இப்படி பேசிக்கிட்டு இருக்கிறது முக்கியமல்ல .
அரசியலிலும் நாங்கள் இணையும் அவசியம் வந்தால் கண்டிப்பாக சொல்கிறோம். தமிழகத்தின் மேம்பாட்டுக்காக சேர்ந்து பயணிக்க வேண்டி வந்தால் பயணிப்போம் .
எங்களது கொள்கைகள் ஒத்துபோகுமா என்றால் அதை பத்தியெல்லாம் அப்புறம் பேசிக் கொள்ளலாம் அதற்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது.அது பற்றி இப்போது பேசுவது சரியாக இருக்காது
.
இலங்கையில் மீண்டும் கோத்தபய ராஜபக்சே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனால் ஈழத்தமிழர்களுக்கு என்ன மாற்றம் ஏற்படும் எனக்கேட்கிறார்கள்.அவர் மக்களுக்கு நல்ல தலைவராக இருக்கவேண்டும் என நினைக்கும் பட்சத்தில்,அவர் நியாயமான ஒரு ஆட்சியை கொடுக்கவேண்டியது அவரது கடமை.
இது அந்த நாட்டு மக்களின் தீர்ப்பு.இங்கேயும் பலமுறை அந்த மாதிரி நடந்து இருக்கிறது.
எத்தகைய தலைவராக இருந்தாலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டால் எல்லா மக்களுக்கும் சமமான நியாயம் வழங்கவேண்டியது .அவரது கடமை.அவருக்கு அதை தனியாக யாரும் நினைவு படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
முதல்வர் எடப்பாடி குறித்து ரஜினிகாந்த் பேசியது விமர்சனம் அல்ல, அது நிதர்சனம் .
ஐ.ஐ.டி மாணவி பாத்திமா தற்கொலை குறித்து சொல்லவேண்டுமென்றால், நாடெங்கிலும் ஏற்படும் தர்க்கம், இப்போது மாணவர்கள் படிக்கும் இந்த கல்லூரிகளுக்குள்ளும் நுழைந்திருக்கிறது என்பது வருத்தத்துக்குரிய விஷயம்.”என்று கமல்ஹாசன் கூறினார்.