“சமந்தாவுக்கு பிள்ளை பொறக்கப் போகுதாமே தெரியுமா?”
“இதென்ன அதிசயம்? பொண்ணுன்னு பொறந்து அதுக்கு கல்யாணமும் நடந்து சந்தோஷமா குடும்பம் நடந்துச்சின்னா புள்ள பொறக்கப்போகுது. அது ஆணா ,பொண்ணாங்கிறது பொறந்த பெறகுதான் தெரியும். சமந்தாவும் பொம்பளதானே ?”
“அட அதுக்கில்ல ? ஒரு ரசிகர் எப்ப புள்ள பெத்துக்கப் போறீங்கன்னு கேட்டுட்டார். அதுனால அக்காவுக்கு கோபம்.ஆனாலும் என்ன,அவர் ஒன்னும் தப்பா கேக்கலியே ?கல்யாணம் கட்டி இம்பிட்டு வருஷம் ஆயிருக்கே..ஏதாவது பலன் இருக்காமாங்கிற ஆசையில் கேட்டிருக்கார்.இந்த காலத்தில ரசிகர்கலாம் இப்படித்தானே இருக்காய்ங்க.தனக்கு புள்ள குட்டி இருக்கான்னு கவலைப்பட மாட்டான். ஊருக்காகத்தான் கவலைப்படுவான்.”
“அதுக்காக?”
“குருட்டான் போக்கில சமந்தா ஒரு தேதிய சொல்லிருக்கு ! ஆகஸ்ட் 7 ம் தேதி, விடிகாலை 7 மணிக்கு 2022 ம் வருஷம் பொறக்கும்னு சொல்லிருக்கு.”
“ஓகோ அப்படியா? என்னா நக்கலு..ஏழாம் மாசம் ஆகஸ்ட்டாம்.”