சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதியின் மக்கள் பிரதிநிதி தொல்.திருமாவளவன். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்.
இவர் ஆலயங்கள் தொடர்பாக தெரிவித்த கருத்து தமிழகத்தில் ஒரு பிரிவினர் இடையில் பலத்த கண்டனத்தை கொண்டுவந்தது. குறிப்பாக பிராமணர்கள், பாஜகவை சேர்ந்தவர்கள்,ஆலயங்களுக்கு சென்று வழிபடுகிறவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.
சினிமா டான்ஸ் மாஸ்டர் காயத்ரி ரகுராம் என்பவர் எல்லை மீறி வார்த்தைகளை கொட்டி விட்டார். “திருமாவை பார்க்கும் இடங்களில் செருப்பால் அடியுங்கள் “என்று அவருடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.
அது வன்முறையைத் தூண்டுவதாக இருந்தது.
இதனால் அவரது டிவிட்டர் கணக்கு முடக்கி வைக்கப்பட்டிருக்கிறது .இவருக்கு 3 லட்சங்களுக்கும் அதிகமான பாலோயர்ஸ் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் திருமா,காயத்ரி இருவருக்குமே கண்டனங்கள் குவிந்து வருகின்றன.ஆதரவும் பெருகி இருக்கின்றன. திருமாவுக்கு ஆதரவாக இயக்குநர் பா.ரஞ்சித் கருத்து தெரிவித்திருக்கிறார்.
“ஒரு கருத்தையொற்றி எதிர்வைக்கப்படும் விமர்சனம் விவாதத்தை ஏற்படுத்த வேண்டும்.ஆனால் இங்கு விமர்சனங்களாக வசைகள்,தனிமனித தாக்குதல்கள்&அவதூறு நிகழ்த்தப்படுவது இவர்களுக்கு பண்பாடாகவே இருக்கிறது.அண்ணன் திருமாவை தரம்தாழ்த்தும் பிற்போக்காளர்கள் எண்ணம் ஒருபோதும் ஈடேறபோவதில்லை!”என்பதாக சொல்லியிருக்கிறார்.
தொல் .திருமாவளவன் டெல்லியில் இருந்து ஒரு செய்தியை தெரிவித்திருக்கிறார். காயத்ரியை எதிர்த்து போராட வேண்டாம் என்பதாக அதில் சொல்லியிருக்கிறார்.
“விரல் கொண்டு நசுக்கும் எறும்பை வேல் கொண்டு தாக்குவதா?
பெண்களை வைத்து தொழில் செய்து ஒன்றிரண்டு படங்களில் நடித்துள்ள தற்குறிகளுக்கு என்ன தெரியும்?
குடித்துவிட்டு காரோட்டும் தற்குறிகளுக்கு என்ன தெரியும்?
அவிழ்த்துப் போட்டும்,ஆடைகள் அகற்றியும் நடிப்பது அவர்களது தொழில்” என்பதாக பேசியிருக்கிறார்.
தொல். திருமாவளவன் பேசிய வீடியோ பேச்சு இணைப்பு கீழே!