ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், உருவாகியுள்ள ’தர்பார்’ வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
இந்நிலையில் ரஜினியின் பேட்ட படத்தை தொடர்ந்து, அனிருத் இசையமைத்துள்ள தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் டிசம்பர் 7ஆம் தேதி நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.வழக்கம் போல ரஜினியின் அறிமுகப் பாடலை இப்படத்திலும் எஸ்.பி.பி பாடியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்
அதே சமயம், இசை வெளியீட்டுக்கு முன்பாகவே இந்த படத்தில் இடம்பெறும் இரண்டு பாடல்கள் தனி பாடலாக வெளி வர உள்ளதாகவும், அதில், ’சும்மா கிழி’ என தொடங்கும் குத்துப்பாடல் வரும் 27ம் தேதி வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.