மக்கள் நீதி மய்ய தலைவரும், நடிகருமான கமல்ஹாசனுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த விபத்தில் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால், அவரது காலில் அறுவை சிகிச்சை மூலம் டைட்டேனியம் கம்பி பொருத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் முறிந்த எலும்பு சேர்ந்துவிட்டதால், மீண்டும் அறுவை சிகிச்சை செய்து கம்பியை எடுத்துவிடலாம் என்று டாக்டர்கள் கூறினர்.
இதையடுத்து இன்று காலை கமலுக்கு சிகிச்சை நடக்கவுள்ளதாக மக்கள் நீதி மய்யம் தெரிவித்திருந்தது. அதன் படி, நேற்று கமல்ஹாசன்சென்னையில் உள்ளதனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.
இன்று காலை கமல்ஹாசனுக்கு அறுவை செய்து அவரது காலில் பொருத்தப்பட்டடைட்டேனியம் கம்பி நீக்கப்பட்டது. 1 மணிநேரம் நடந்த இந்த அறுவை
சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்ததாகவும்,கமல்ஹாசன் நலமுடன் உள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன இந்த ஆபரேஷனுக்கு பிறகு அவர் சில வாரங்களுக்கு ஓய்வில் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த சில வாரங்களுக்கு கமல் ஓய்வில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறியிருப்பதால் இந்தியன் 2ம் பாகம் படப்பிடிப்பில் பங்கேற்பதை தள்ளிவைத்திருப்பதுடன், கட்சிப் பணிகளையும் தள்ளி வைத்திருக்கிறார் மகள்கள் ஸ்ருதிஹாசன், அக்ஷா ஹாசன் கமலை உடனிருந்து கவனித்து வருகின்றனர்.
(கோப்பு படம்)
இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக பொருளாளர் துரைமுருகன், சுப. வீரபாண்டியன் ஆகியோர் இன்று காலை மருத்துவமனைக்கு நேரில் சென்று கமல்ஹாசனை சந்தித்து நலம் விசாரித்தனர்.