- தேவன் ஏசுவின் வேதம்
- வேதம் ,வேதம் ,வேதம்,
- கண்ணன் சொல்லிய கீதை
- கீதை,கீதை கீதை.
- தேவன் வேதமும் கண்ணன் கீதையும்
- ஒரு பாதையில் இங்கு சங்கமம் ……..
மறக்க முடியாத பாடல். ராஜ நாகம் படத்தில் வி.குமார் இசையமைத்து எஸ்.பி.பாலுவும் .பி.சுசீலாவும் பாடி இருப்பார்கள்.
ஒரு இந்துவும் கிறித்தவரும் காதலித்த கதை. காதலுக்கு முன் மதங்கள் மறைந்து போய் மனங்கள் இணைந்த காதல் கதை. 1976-லேயே சொல்லிவிட்டார்கள்.
அதன் பிறகு எத்தனையோ மாற்றங்கள்.ஆனாலும் பகிரங்கமாக சொல்லிக் கொள்ளாமல் கலப்பு காதல் திருமணங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
இப்போது சொல்லப்போவது பிரபல, முன்னணி திரையுலக குடும்பங்களின் சங்கமம் பற்றியது.
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர்.கிறித்தவர். இவரின் உடன் பிறப்பான தங்கை மகள் விமலாவின் மகள்தான் சினேகா பிரிட்டோ. இவரின் தந்தை பிரிட்டோ தயாரிப்பாளர்,மற்றும் பெரும் தொழிலதிபர்.
மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா.இவரது தம்பி ஆகாஷ். லயோலாவில் விஸ்காம்.
கல்லூரியிலேயே இவருக்கும் சினேகாவுக்கும் காதல்.கல்யாணத்துக்கு மதம் தடையாக இருந்தது.கடுமையான எதிர்ப்பு சந்திரசேகர் தரப்பில்.!
ஒரே மகளின் ஆசைக்கு பெற்றோர் கட்டையைப் போடவிரும்பவில்லை. ஏற்றுக் கொண்டார்கள்.
டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் லீலா பாலசில் நிச்சயதார்த்தம்!
வாழ்க மணமக்கள்.