உலகநாயகன் கமலின் குடும்பம் ஆத்தீகம் பேசக்கூடியது. அதில் முரண்பட்டு நிற்பவர் உலகநாயகன் கமல்.
ஆத்தீகத்தின் நெளிவு,சுழிவுகளை அக்கு அக்காக பிரித்து அலசுகிறவர் அவரது அண்ணன் சாருஹாசன். மருமகன் மணிரத்னம் பொதுவுடமைவாதி .இவரது மகனும் அப்படியே.
ஆனால் இவர்களின் வீட்டுக் குடும்பப் பெண்மணிகளின் சுகாசினியைத் தவிர மற்றவர்கள் ஆத்தீகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள்.
கமல் தனித்து வாழ்ந்தாலும் அவருக்கும் அண்ணன் தம்பி பாசம் உண்டு. இவருக்கென துணைகள் வந்து வந்து போகும்.
காலில் அடிபட்ட காலத்தில் கமலுக்கு ஒரு துணை இருந்தது ,அவர் கவுதமி.நட்பு.
ஆனால் காலில் இருந்த கம்பியை அகற்றிய காலத்தில் அந்த நட்பு காணாமல் போனது.
நிலையாக நின்றது குடும்ப உறவுதான்!
இதோ மருத்துவ மனையில் இருந்து திரும்பிய கமலுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பவர் அண்ணியார் சாருஹாசன் .அருகில் நிற்பது மகள் உறவு சுகாசினி.
சனாதனம் உடைக்கும் கமல் அரசியலுக்கு வந்து விட்டதால் ஆரத்திகள் நடைமுறைகள் ஆகிவிடும்.