![]() |
||
தொடர்ந்து குடும்பங்கள் கொண்டாடும் தரமான வெற்றிப்படங்களை தந்து வரும் 2 டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் அடுத்த பட பூஜை, சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நடிகர் சூர்யாவின் அகரம் பவுண்டேஷனில் இன்று மிகப் பிரமாண்டமாக நடந்தது.
இயக்குநர் இரா.சரவணன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்க, ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, டி.இமான் இசை அமைக்க,படத் தொகுப்பாளர் ரூபன் எடிட்டிங் பணியைக் கவனிக்க, முஜூபுர் ரஹ்மான் கலை இயக்குநராகப் பங்கேற்கிறார். இந்தப் படத்தின் முழுப் படப்பிடிப்பும் புதுக்கோட்டை மற்றும் தஞ்சை மாவட்டப் பகுதிகளில் திட்டமிடப்பட்டிருக்கிறது.
இவ்விழாவில் .சிவகுமார், 2 டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனரும் தயாரிப்பாளருமான சூர்யா,மற்றும் கார்த்தி, சசிகுமார், ஜோதிகா, சமுத்திரக் கனி, சூரி, கலையரசன், இமான், 2 டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் CEO ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன், இயக்குநர்கள் பாண்டிராஜ், கல்யாண், பிரெட்ரிக், சி கௌதமராஜ், டீ. ஜே ஞானவேல், குகன் சென்னியப்பன், தயாரிப்பாளர் S R பிரபு, ஒளிப்பதிவாளர்கள் ரவி வர்மா ராம்ஜி, கதிர், விநியோகஸ்தர் B.சக்திவேலன் மற்றும் பின்னணி பாடகர் கிரிஷ் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்













