எழுத்து இயக்கம் ;சரண் ,ஒளிப்பதிவு :கே.வி.குகன் ,இசை :சைமன் கே .கிங்,
ஆரவ்,ராதிகா சரத்குமார்,காவ்யா தாப்பர்,நாசர்,ரோகிணி, நிகிஷா பட்டேல், சாயாஜி ஷிண்டே ,
**************
முதலில் ராதிகா சரத்குமாருக்கு பலத்த கண்டனம். “உங்களுக்கு இது தேவையா ? காமெடிதானே இது என்று சொன்னால் உங்கள் அனுபவமே அதை மறுக்கும். சறுக்கி விழுந்து விட்டு சாக்கு சொல்கிறாயா என தண்டிக்கும். ஆரவ் விட்ட உதையில் அந்தரத்தில்’பிரீஸ் ஆகி ‘நிற்கும் அந்த கடைசி காட்சியை பார்த்து விட்டு சொல்லுங்கள் மேடம்”
சமூகம்,ஆவி என கலந்து கட்டி இயக்குநர் சரண் அடித்திருக்கிற கூத்துதான் மார்க்கெட் ராஜா எம்.பி.பி .எஸ். ! வசூல் ராஜா எம்.பி பி.எஸ். படம் இவருக்கு கை கொடுத்திருக்கிறது.மருத்துவக் கல்லூரி மாணவர் சந்திரபாபுவின் ஆவி மார்க்கெட் ராஜா உடம்புக்குள் புகுந்து கொள்ள இவருக்கு காதல் கலகலப்பு. மார்க்கெட் ராஜா உடலுடன். தேர்வு எழுதுவதெல்லாம் அத்து மீறல்.
படத்தின் சண்டியர் ஆரவ். சில படங்களில் தலையைக் காட்டியிருக்கிற இவருக்கு நாயகன் அந்தஸ்து கொடுத்திருக்கிற படம்.
“எனக்கு காதல்,டூயட்டெல்லாம் வேணாம் ,ஆக்சன் பிளாக் மட்டுமே போதும் என சொல்லிவிட்டாரோ என்னவோ அதையெல்லாம் சாம்பிளுக்கு கொஞ்சம் வைத்து விட்டு ஆரவ்வை அடிதடியில் இறக்கிவிட்டிருக்கிறார் இயக்குநர். மிகப்பெரிய டான் என்பதை ஒப்புக்கொள்ளமுடியவில்லை.பிஞ்சு மூஞ்சி தம்பிக்கு.!
கதைக்காக சரண் மெனக்கெடவில்லை. அமைச்சர் சாயாஷி ஷிண்டேவுக்கு ஒரு நம்பிக்கையான டான் தேவை. ஆரவ்க்கு ரயில்வே கான்டராக்ட் கொடுத்து தன்னுடைய கைத்தடியாக அவரை வைத்துக் கொள்கிறார். சக மந்திரியான ஹரிஷ் பெரடிக்கு காண்டு. ஆரவ்வை போட்டுத்தள்ளிவிட்டால் ஷிண்டேயின் ஆட்டம் குளோஸ் ஆகிவிடும் என கணக்குப் போட்டு காயை நகர்த்த கிராஸ் பயரிங்கில் பலியான கல்லூரி மாணவன் சந்திரபாபுவின் ஆவி ஆரவ்வின் உடம்பில் புகுந்து கொள்கிறது. டானாக இருந்தவர் கோழையாகிவிடுகிறார் .அவர் மீண்டும் எப்படி டான் ஆகிறார் என்பதைத்தான் ரப்பராக இழுத்து சொல்லியிருக்கிறார்கள்.
வாணி ஸ்ரீ,சந்திரபாபு,சுந்தரிபாய்,சிவாஜி,லதா,ராதா,ராமதாஸ்,நாகேஷ்,என அந்தக் கால கலைஞர்களின் பெயரை கேரக்டர்களுக்கு வைத்திருக்கிறார்கள்.
மற்றபடி ஒன்றுமில்லை.!
சினிமா முரசத்தின் மதிப்பெண் .2 / 5