இயக்குநர் விக்னேஷ் சிவன்- நடிகை நயன்தாரா இவர்களது இனிய காதல் பயணம் ஆறாவது ஆண்டினை தொடங்கவிருக்கிறது.
கேரள நாட்டின் இளம் பெண்ணுடன் தோணிகள் ஒட்டி வெற்றிகரமாக விக்னேஷ் வாழ்க்கையை கடந்திருக்கிறார். நயனுக்கு நம்பிக்கை நாயகனாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
2015-ல் நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் தொடங்கிய இவர்களின் காதல் இல்லற சுகத்தையும் கலந்தே வளர்ந்திருக்கிறது.
நயனின் 35 ஆவது பிறந்த நாளினை கொண்டாடுவதற்காக ஃ பாரின் பறந்த இந்த காதல் பறவைகள் கடந்து வந்த பாதையை கடல் கடந்த நாட்டில் அமர்ந்து கணக்குப் போட்டு பார்த்திருக்கின்றன.
கலிபோர்னியாவில் உள்ள நயனின் தோழியர் வீட்டில் இரவு பார்ட்டி வித் ஒயின்.! புத்தாண்டு காதலை அனுபவித்திருக்கிறார்கள்.
தற்போது விக்கியின் நெற்றிக்கண் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.மிலிந் ராய் இயக்கிவரும் இந்த படத்தின் தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன்.