ராதாரவிக்கும் சின்மயிக்கும் ஏழாம் பொருத்தம். ராதா ரவி சும்மா இருந்தாலும் சுரண்டிக் கொண்டே இருப்பார் சின்மயி. டிவிட்டரில் தன்னை ஒரு போராளியாக காட்டுவதில் சின்மயிக்கு ஒரு சந்தோசம்.
வைரமுத்துவுக்கு யாராவது வாழ்த்துப் பாடி விட்டால் இந்த சின்மயிக்கு பொறுக்காது .பொங்கிவிடுவார்.
“அவரை ஏன் விழாவுக்கு கூப்புடுறீங்க, எதுக்கு பொன்னாடை போத்துறீங்க ,வேற ஆளே கிடைக்கலையா ” என மல்லுக்கு நிற்பார்.
அது ராதாரவியிடம் பலிக்குமா?
பதிலுக்குப் பதில் மணி அடித்து விடுவார். சின்மயியை டப்பிங் ஆர்ட்டிஸ்ட் யூனியனில் இருந்து தூக்கி இருக்கிறார்கள். அது தொடர்பான வழக்கும் நிலுவையில் இருக்கிறது.இதானால் ரவி மீது கோபம்.
பிஜேபியை வளர்ப்பதற்காக அண்மையில் பாஜகவில் இணைந்திருக்கிறார் ராதாரவி. மேடைக்கு மேடை திராவிட இயக்கங்கள் சார்பில் நன்றியை சொல்லிவந்த ராதாரவி இனிமேல் யார் சார்பில் நன்றி சொல்வார் என்பது தெரியவில்லை. ஊட்டச்சத்து கொடுப்பதற்காக நமீதாவும் பிஜேபியில் இணைந்திருக்கிறார் என்பதை குறிப்பிட்டேயாக வேண்டும். இவர்களது இணைப்பினால் திராவிட இயக்கங்கள் மூச்சு முட்டபி போவது நிச்சயம்.
இந்த நிலையில்தான் ராதாரவியை “ஏன் பிஜேபியில் சேர்த்திருக்கிறீர்கள். அவர் பெண்களுக்கு எதிரானவர். பாலியல் தொல்லைகள் பற்றி புகார் செய்தால் அவர்களை சங்கத்தில் இருந்து நீக்கி விடுவார்.அவரையா சேர்த்திருக்கிறீர்கள். அவரை கேள்வி கேளுங்கள்” என கனல் கக்கியிருக்கிறார் சின்மயி.