ஒரு வழியாக சூறாவளி கடந்து சென்று விட்டது.
கூடிய கருமேகமும் மழையாய் கொட்டித் தீர்த்து பசுமைக்கு வழி விட்டிருக்கிறது.
இனி விதைப்புத்தான். அப்புறம் அறுவடைதான்.!
எல்லாமே தயாரிப்பாளர் கையில்தான் இருக்கிறது என்கிற அளவுக்கு எஸ்.டி .ஆர். மொத்தமாக கால்ஷீட்டை அள்ளி சுரேஷ் காமாட்சியிடம் கொடுத்திருக்கிறார்.
புத்தாண்டு ஜனவரி 20-ல் தொடங்கி ஏப்ரல் 10 வரை மொத்த கால்ஷீட்டும் இவருக்குத்தான்.அதை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தயாரிப்பாளருக்கும் இயக்குனர் வெங்கட் பிரபு டீமுக்கும் இருக்கிறது.இசை யுவன் சங்கர் ராஜா. நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பார் என சொல்லப்பட்டிருந்தது. அதில் எதுவும் மாற்றம் இருக்கிறதா என்பதை சுரேஷ் காமாட்சிதான் சொல்ல வேண்டும்.
தயாரிப்பாளர் சங்கப் பிரதிநிதி சத்ய ஜோதி தியாகராஜன் ,சிம்புவின் அம்மா உஷா ராஜேந்தர் இருவருக்குமிடையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு சிம்பு-சுரேஷ்காமாட்சி இருவருக்கும் இருக்கிறது.
எல்லாமே திட்டமிட்டபடி நடந்தால் தமிழர் வருடப் பிறப்பான தை பொங்கலில் மாநாடு நடக்கும்.
எதிர்பார்ப்போம்.! தமிழர்கள் கூடி எடுக்கிற படம்.! வெல்லட்டும்.