கோவில் குருக்களின் பெயர் சத்யா நாராயணா.
மந்திரம் சொல்லி இறையடி தொழ வேண்டிய அந்த கடப்பா மாவட்டத்தை சேர்ந்தவன்.ரெட்டிவரி பள்ளி என்பது கோவில் இருக்கிற தலம். இங்கே மலைவாசிப் பெண் ஒருத்தி கடவுளை வணங்க வந்தாள் .
வயது 14. அந்த பருவத்துக்கேற்ற வளர்சசி. அது இயற்கை அருளிய வரம் . எல்லாப்பெண்களுமே குருக்களின் மகள் உள்ளிட்ட அத்தனை பெண்களுமே அத்தகைய வளர்சசியைப் பெற்றிருப்பார்கள்.
“பெண்ணே! உனக்கு நான் பகவத் கீதையின் பெருமையைச் சொல்லித் தருகிறேன்” என சொல்லி அந்த இளம்பெண்ணை சத்யா நாராயணா குருக்கள் கெடுத்து விட்டு ஓடி விட்டான்.
தலைமறைவு வாழ்க்கை. குருக்கள் வேஷம் களைந்து சாதாரண மனிதனைப் போல கிழக்கு கோதாவரி மாவட்டத்துக்கு ஓடி விட்டான்.
தனது செல்போனில் பேசாமல் அடுத்தவர் போனை வாங்கி சொந்த வீட்டாருடன் பேசி வந்திருக்கிறான்.
குழு அமைத்து போலீஸ் வேட்டையாடிப் பிடித்திருக்கிறது. டாக்டர் பிரியங்கா கொலை வழக்குக்கு அடுத்து தற்போது ஆந்திராவின் பரபரப்பு கோவில் குருக்கள் வழக்குதான்.!