பாபி சிம்ஹா, கலையரசன், ரேஷ்மி மேனன் நடித்த ‘உறுமீன்’ படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்துள்ளது. இதனால் படத்திற்கு தமிழக அரசின் வரிவிலக்கு சலுகையை இழக்கின்றது இப்படம்.
பாபி சிம்ஹா, ரேஷ்மி மேனன் இருவருக்கும் இப்படத்தில் நடிக்கும்போது காதல் மலர்ந்தது. இவர்களின் கல்யாண அறிவிப்பும் வெளியாகிவிட்டது. இந்நிலையில் உறுமீன் திரைப்படம் டிசம்பர் 4ம் தேதி திரைக்குவர உள்ளது. இதனால் படத்திற்கு சற்று எதிர்பார்ப்புகள் கூடியுள்ளது. சக்திவேல் பெருமாள்சாமி இப்படத்தை இயக்கியுள்ளார். ஆக்சிஸ் பிலிம் ஃபேக்டரி இந்த படத்தை தயாரித்துள்ளது. தேனாண்டாள் பிலிம்ஸ் இப்டத்தை வெளியிடுகிறது.