‘த்தூ ‘வென காறி உமிழத் தோணுகிறது.
“உன் வீட்டுப் பெண்களுக்கும் இதேதான் உபதேசமா” என கேட்கத் தோணுகிறது.
எவ்வளவு திமிர்,கொழுப்பு இருந்தால் இப்படியெல்லாம் அறிவுரை சொல்லத் தோணும்?
இன்னும் என்னென்னவோ கேட்கத் தோணுகிறது.
டேனியல் ஷ்ராதவன் …..மும்பை தயாரிப்பாளர் இயக்குநர் என்கிறார்கள்.
இந்த அடங்காதவன் சொல்லியிருக்கிற அறிவுரைகளைக் கேட்டால் நீங்களும் கொதித்து எழுவீர்கள்.!
நாடே பாலியல் வன்புணர்வு படு கொலைகளுக்கு எதிராக எழுந்து நிற்கிற வேளையில் இந்த ஆள் என்ன பதிவு செய்திருக்கிறான் தெரியுமா?
“வன்முறை இல்லாத பாலியல் வன்புணர்வை சட்டமாக்கவேண்டும்.( ரேப் பண்ணிய பிறகு கொலைசெய்யக்கூடாது.)
18 வயதான பெண்களுக்கு பாலியல் வன்முறை பற்றி பாடம் நடத்த வேண்டும் ( ஆணின் ஆசைக்கு பெண்கள் மறுப்பு சொல்லக்கூடாது.)
இப்படி செய்தால்தான் பாலியல் வன்புணர்வு படுகொலைகள் நடக்காது.
பெண்கள் தங்களுடன் காண்டம் எடுத்துச்செல்ல வேண்டும்.”
இப்படியெல்லாம் பதிவு செய்து விட்டு அதை தனது முகநூல் பக்கத்தில் இருந்து நீக்கி இருக்கிறான்.
இத்தகைய வெறியர்களை சட்டம் வெளியில் விட்டு வைத்திருக்கிறது.