ராதிகா ஆப்தே…
துணிச்சலான நடிகை. தமிழ்ப் படங்களிலும் நடித்திருக்கிறார்.
“முற்போக்கான எழுத்துக்கள் என சொல்லி எதையும் எழுதி விடுகிறார்கள். அத்தகைய கருத்துள்ள கதைகள் வருகிறபோது நிராகரித்து விடுவேன்” என்கிறார்.
அப்படியானால் பட் லாபூர் என்கிற படத்தில் படு கவர்ச்சியாக நடித்திருப்பது எதனால்?
அதற்கும் காரணம் சொல்கிறார் ராதிகா ஆப்தே.
“தன்னுடைய கணவன் கொலை செய்யப்படுவதில்லை இருந்து அவனைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் அந்த கேரக்டருக்கு இருந்தது. அதனால் அப்படி நடிக்கவேண்டியதாக இருந்தது. இதனால் இத்தகைய கேரக்டர்களில் நான் நடிப்பேன் என நினைத்து நிறைய பேர் என்னிடம் கதை சொல்ல வந்து விட்டார்கள். முற்போக்கு எழுத்துக்கள் என்கிற பெயரில் எதையாவது எழுதிக் கொண்டு வந்து விடுகிறார்கள்.” என்கிறார் ராதிகா ஆப்தே.