விஜயகாந்த் மீண்டும் நடிக்க உள்ள ‘தமிழன் என்று சொல்’ படத்தின் பூஜை நேற்று சென்னை RKV ஸ்டூடியோவில் நடைபெற்றது. கட்சி உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.கள் நிறைய பேர் வருகை தந்து விழாவை நடக்கும் இடத்தை ஸ்தாபிக்கவைத்துவிட்டனர். பூஜை முடிந்த பின்பு பத்திரிகையாளர்களை சந்தித்துபேசினர் படக்குழுவினர்.
அப்பொழுது பேசிய ‘ஹிப் ஹாப்’ தமிழன் ஆதி, எல்லோரும் ஏன் இந்த படத்திற்கு இசையமைக்க ஒப்புக்கொண்டீர்கள் என என்னிடம் கேட்டனர். அதற்கு முதல் காரணம் இது தமிழுக்கான படம். ஹிப் ஹாப் தமிழன் என்ற ஆல்பம் மூலம் தான் நான் வெற்றி பெற்றேன். அது தான் முதல் காரணம். இரண்டாவது காரணம் விஜயகாந்த் இப்படத்தில் நடிப்பதால் எனக்கூறினார்.
பின்பு பேசிய விஜயகாந்த், இனிமேல் நடிக்கக்கூடாது என்று தான் முடிவு செய்தேன். ஆனால், என் மனைவியும், மூத்த மகனும் இந்த கதையே கேட்டபின்பு இதில் நான் தான் நடிக்கவேண்டும் என வற்புறுத்தினர். வேறு யாரையாவது பெரிய ஹீரோகளை நடிக்கவைக்கலாமே என நான் கூறினேன். ஆனால், நான் அதில் நடித்தால் தான் நன்றாக இருக்கும் எனத்தெரிவித்தனர். இயக்குனரும் அதையே தான் கூறினார். படத்தின் கதையை கேட்டேன். கதையில் தமிழன் என்கிற ஒரு வெறி இருந்தது, அதற்காக தான் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டேன். என் மகன் சண்முக பாண்டியன் நடிக்கிறான் என்பதற்காக இல்லை, தமிழன் என்ற வெறிக்காக தான் ஒப்புக்கொண்டேன் எனக்கூறினார்.