கேப்டன் விஜயகாந்த், ரகுமான், இளைய தளபதி விஜய் ஆகிய ஸ்டார் ஹீரோக்களை அறிமுகம் செய்த இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரணை இந்த படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் செய்கிறார் கலைபுலி எஸ்.தாணு. இன்னொரு ஹீரோவாக கவிஞர் பா.விஜய் நடிக்கிறார். கதாநாயகியாக சாந்தினி நடிக்கிறார். மற்றும் எம்.எஸ்.பாஸ்கர், நான் கடவுள் ராஜேந்திரன், விஜி மற்றும் பலரும் நடிக்கிறார்கள்.
எஸ்.ஏ.சந்திரசேகர் 70 வயது நிரம்பிய அதே நேரத்தில் தவறுகளை கண்டு வெகுண்டெழும் கோபக்கார கிழவனாக அதிரடி கதாப்பாத்திரத்திலும், கவிஞர் பா.விஜய் வேகமான துடிப்புள்ள இளம் ரிப்போர்ட்டராகவும், நான் கடவுள் ராஜேந்திரன் நகைச்சுவை கலந்த வில்லனாகவும், எம்.எஸ்.பாஸ்கர் ஒரு கிருமினலான போலீஸ் அதிகாரியாகவும், ஆரோகணம் விஜி புரட்சிகரமான ஏழைத் தாயாகவும் நடிக்கின்றனர்.
இந்த படத்தை புதுமுக இயக்குனர் விஜய்விக்ரம் இயக்குகிறார். இவர் பூனா பிலிம் இன்ஸ்டியூட்டிலும், பம்பாயிலும் டைரக்ஷன் படித்தவர். ஜீவன் ஒளிப்பதிவு இயக்குனராகவும், தாஜ்நூர் இசையமைக்க, கலை இயக்குனராக வீரமணியும், ஸ்டன்ட் மாஸ்டராக பில்லா ஜெகனும் பணிபுரிகிறார்கள். கலைபுலி எஸ்.தாணு அவர்கள் V Creations சார்பில் பிரமாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.
இந்த படம் பற்றி தாணு அவர்கள் கூறுகையில்.. ஒரு ஆக்ஷன் படத்தை வித்தியாசமாகவும் முழுக்க முழுக்க நகைசுச்வையாகவும் சொல்லியிருக்கும் படம்தான் இது. இயக்குனர்கள் பவித்ரன்,ஷங்கர், ராஜேஷ் பொன்ராம் இவர்களை தொடர்ந்து எஸ்.ஏ.சந்திரசேகரின் பட்டறையில் இருந்து புறப்பட்டு வரும் அடுத்த இயக்குனர் விஜய்விக்ரம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரே நேரத்தில் மகன் இளையதளபதி விஜய், தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் இருவரையும் ஹீரோவாக வைத்து படமெடுக்கும் பெருமை எனக்கு கிடைத்திருக்கிறது என்றும் இந்த படத்தின் மூலம் எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு பெரிய நடிகராகவும் வளம் வருவார் என்பது நிச்சயம் என்றும் கூறினார். படப்பிடிப்பு தொர்ந்து நடைபெற்று வருகிறது.