ஆர்யா மற்றும் அனுஷ்கா இணைந்து நடித்த ‘இஞ்சி இடுப்பழகி’ படத்திற்கு ‘U’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
பிவிபி சினிமாஸ் நிறுவனம் தயாரித்த ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தின் சென்சார் பணிகள் முடிவடைந்தது. ஒரு சில காட்சிகளை நீக்கிவிட்டு படத்திற்கு ‘U’ சான்றிதழ் வழங்கியுள்ளனர் சென்சார் அதிகாரிகள். இப்படம் காதல் கலந்த, குடும்பத்துடன் பார்த்து மகிழக்கூடிய படமாக கே.எஸ்.பிரகாஷ் ராவோ இயக்கியுள்ளார்.
தனது குண்டு உடம்பால், கேலி, கிண்டலுக்கு ஆளாகும் அனுஷ்கா உடலைக்குறைக்க துடிக்கும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஆர்யா ஒரு ஆவணப்படம் தயரிப்பவராக நடித்துள்ளார். அவருக்கு உற்பயிற்சி என்றால் கொள்ளை இஷ்டம், உடலை கட்டுக்கோப்பாக வைக்கவேண்டும் என நினைப்பவர். ஆர்யாவின் நிஜ வாழ்கைக்கும், படத்தில் வரும் கதாபாத்திரத்திற்கும் நிறைய ஒற்றுமை உண்டு. பாகுபலி, ருத்ரமாதேவிக்கு பிறகு அனுஷ்காவிற்கு, முற்றிலும் மாறுபட்ட கதாப்பாத்திரம் இப்படத்தில். இப்படம் வரும் வெள்ளிகிழமை 27-ம் தேதி ரிலீசாக உள்ளது.
தெலுங்கில் இப்படம் Size Zero என்ற பெயரில் வெளியாக உள்ளது. மேலும் உலகம் முழுவதும் 1500 திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக பிவிபி சினிமாஸ் தெரிவித்துள்ளது.