“தர்பார்”படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது,“தர்பார் படம் எல்லோருக்கும் ஒரு விருந்தாக இருக்கும். ரமணாதிரைப்படம் பார்த்தபோதே முருகதாஸை எனக்குப் பிடித்துவிட்டது. கஜினி முடித்ததும் அவரும் நானும் படம் பண்ண பேச்சுவார்த்தை நடந்தது. ஆனாலும் தள்ளிப்போய்விட்டது. நான் சிவாஜியும், அவர் இந்தியில் கஜினியும் செய்தார். அதன் பிறகு நாங்க படம் பண்ணுவது தள்ளி போய் கொண்டே இருந்தது. நான் லிங்கா படத்துல நடிச்ச பிறகு வயசாகிவிட்டது. இனி இளமையான தோற்றத்துல படம் நடிக்க கூடாதுனு நினைச்சேன். கபாலி, காலா படங்களில் நடிக்கத் தொடங்கினேன். அப்போ 90’களில் இருந்தது போல் என்னை பார்க்க வேண்டும் என கார்த்திக் சுப்புராஜ் `பேட்ட’ படத்தை எடுத்தார்.
அந்த சமயத்தில், அதேபோல் ஒரு ஸ்கிரிப்ட் உடன் முருகதாஸ் வந்திருந்தார். அருமையான ஒரு படத்தை முருகதாஸ் கொடுத்து இருக்கார். மூன்று முகத்துக்கு அப்புறம் எனக்கு இந்த படம் பவர் புல் கேரக்டர்.150 படங்கள் பண்ணியிருந்தாலும் த்ரில்லர் சஸ்பென்ஸில் இது ஒரு திருவிழா மாதிரி இருக்கும். அவ்வளவு சிறப்பாக செய்துள்ளார் சந்திரமுகிக்கு பிறகு நயன்தாராவுக்கு என்னுடய படத்தில் அருமையான கேரக்டர். அனிருத் நம்ம வீட்டு குழந்தை. அவரது வளர்ச்சி படத்துக்கு படம் சந்தோஷம்.
இளையராஜாவுக்கு ஸ்டோரி சென்ஸ் இருப்பது போல எந்த இசையமைப்பாளருக்கும் இல்லை. அந்த குவாலிட்டி அனிருத்துக்கு இப்பவே வந்துருக்கு. பேட்ட ஆலபத்தை விட தர்பார் இன்னும் சிறப்பாக இருக்கும். மும்பையில் நடப்பது போன்ற கதை. வரும் டிசம்பர் 12 எனது பிறந்த நாள். எனக்கு இந்த ஆண்டு மிகவும் முக்கியமானது. நான் எனது 70வது வயதில் நுழைகிறேன். எனது பிறந்த நாளை ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம்.
இது ஆடியோ விழா அல்ல. எனது பிறந்த நாள் விழாவாக நினைக்கிறேன். ஆடம்பரமாக கொண்டாடாமல் தேவையானவர்களுக்கு உதவி செய்யுங்கள். இது போன்ற ஆடியோ ரிலீஸூக்கு அரசு அரங்கம் தந்துள்ளது. இந்த அரசு மீது பல விமர்சனங்கள் வைத்துள்ளேன். அதையெல்லாம் மனதில் வைத்துக்கொள்ளாமல் அரங்கம் தந்ததில் மகிழ்ச்சி. இந்த ஆடியோ விழாவை எனது பிறந்த நாள் விழாவாகவே கருதுகிறேன்.
இதுவரைக்கும் யாருக்கும் தெரியாத 2 விஷயத்தை இந்த விழாவில் சொல்றேன். முதல் விஷயம் நான் சென்னைக்கு வந்தத பத்தி.நடு இரவில் பெங்களூரூவிலிருந்து ரயிலில் ஏறினேன். அது சென்னைக்கு போகும்னு சொன்னாங்க.ஏறினேன். இறங்கும் போது டிக்கெட்தொலைஞ்சுபோச்சு. அப்போது எனக்கு கன்னடம் மட்டும் தான் தெரியும். டிக்கெட்டை தொலைத்து விட்டேன் என்று சொல்லியும் செக்கர் நம்பவில்லை. அப்ப அங்கு வந்த சிலர் எனக்காக பேசினார்கள். அதன் பிறகு தான் செக்கர் போன்னு சொல்லி தமிழ்நாட்டு மண்ணுக்குள் விட்டார்.
ரஜினிகாந்த் என்ற பெயரை எனக்கு வைத்த பாலச்சந்தர் சாருக்கு நன்றி. என்னை ஹீரோவாக நம்பி அறிமுகம் செய்த கலைஞானம் அவர்களுக்கு நன்றி. என்மேல நீங்க வச்சிருக்குற நம்பிக்கை என்றும் வீண் போகாது. 16 வயதினிலே பரட்டை தான் என்னை பட்டி தொட்டிவரை கொண்டு போய் சேர்த்தது.ஆனா, அந்த படத்தில் அட்வான்ஸ் கூட தராமால் நடிக்க வர சொன்னார்கள். ஆனால்,சொன்ன படி பணம் தராமல் என்னை அவமானப்படுத்தினார்கள். அப்போது, பெரிய ஆள் ஆகி ஏவிஎம் ஸ்டுடியோவில் கால்மேல் கால்போடலைன்னா நான் ரஜினி இல்லை என்று முடிவுசெய்தேன். அதே போல், ஃபாரின் கார், ஃபாரின் ட்ரைவர் என ஃப்ரண்ட் சீட்டில் உட்கார்ந்து ‘விடுறா வண்டிய’என ஏவிஎம் ஸ்டுடியோகுள்ள போயி 555 சிகரெட் பிடித்தேன்.
அதன் பிறகு பாலச்சந்தரை பார்க்க போனேன். 2 வருடத்தில் சாதித்தேன் என்றால், நான் மட்டும் என்று சொல்வது தப்பாகிவிடும். அந்த நேரத்தில் இயக்குனர்கள், பாத்திரம், கதை என எல்லாம் சரியாக அமைந்தது தான் காரணம். நம்மால் தான் வெற்றி என்றால் 10% தான்.வெற்றி என்பது சந்தர்ப்பம், நேரம், சாணக்யத்தனம் தான். இப்போது எல்லாவற்றிலும் எதிர்மறை கருத்துகள் அதிகம் பரவுகிறது. அதனால் நாம் அனைவரும் அன்பைப் பரப்பி, நிம்மதியாக வாழ்வோம். அன்புதான் இப்போது தேவை” “இவ்வாறு அவர் பேசினார்.