அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் 59-வது படத்தின் டைட்டில் நீண்ட நாட்களாக வெளியிடாமலே வைத்திருந்தனர். வெற்றி, காக்கி என முன்னும், அதன் பிறகு தாறுமாறு என பிரபல இசையமைப்பாளர் உளறினார் என செய்திகள் பரவியது. தற்பொழுது இந்த டைட்டில் அனைத்தையும் மூட்டை கட்டிவிட்டு புது டைட்டில் வைத்துள்ளனர்.
அஜித் படத்திற்கு புலி படத்தில் வரும் வேதாளத்தை டைட்டிலாக வைத்ததுபோல், வேதாளம் படத்தில் வரும் ஒன்றை தான் இந்த படத்தில் டைட்டிலாக வைத்துள்ளனர். அந்த டைட்டில் இந்த செய்தியின் தலைப்பிலேயே ஒளிந்துள்ளது. இது இணையத்தில் கசிந்துள்ளதால் படக்குழுவினர் சற்று அதிர்ச்சியடைந்துள்ளனர்.
படத்தின் தலைப்பை இன்று இரவு அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளனர். அறிவிப்பு வெளியான உடன் தெறிக்கவிட ரெடியா?