Actor Charu Haasan to get ‘Lifetime Achievement Award’
இயக்குனர் விஜயஸ்ரீ ஜி எழுதி, இயக்கிய ‘தாதா 87’ படத்தில் தனது 87வது வயதில், ஒரு அதிரடியான தாதா வேடத்தில் நடித்த சாருஹாசன், தனது 90 வது வயதிலும், திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
பழம்பெரும் ஹாலிவுட் நடிகர் கிளின்ட் ஈஸ்ட்வுட்டை விட சில மாதங்களே வயதில் பெரியவர் என்றாலும், உலகிலேயே இன்றும் நடித்து வரும் அதிக வயதுடைய ஒரே கலைஞன் சாருஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.
17வது சென்னை சர்வதேச திரைப்படவிழாவின் துவக்க நாளான டிசம்பர் 12 ஆம் தேதி, அவரது கலையுலகப் பங்களிப்பை பாராட்டி, கௌரவிக்கும் விதமாக அவருக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்படுகிறது.
பல்வேறு பிராந்திய மொழிகளில் சுமார் 50 படங்களில் நடித்திருக்கும் சாருஹாசன், 1986ல் வெளியான ‘தபாரனா கதே’ திரைப்படத்திற்காக தேசிய விருதும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.