கிட்டத்தட்ட ஒரு மாதம் நிமோனியாவுடன் சண்டையிட்டிருக்கிறார் , புகழ்பெற்ற இசைக்குயில் லதா மங்கேஷ்கர்.
ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் இருந்து ஆரோக்கியமுடன் வெளியேறினார் என்கிற செய்தி கிடைத்த பிறகுதான் அவரது ரசிகர்கள் நிம்மதி பெரு மூச்சு விட்டிருக்கிறார்கள்.,
சமூக ஊடகங்களில் வாழ்த்து செய்திகள் நிரம்பி வழிகிறது,
மேலும் அவர் தனது டிவிட்டர் பக்கத்தின் மூலம் அவர்களின் அன்பிற்கும் நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்,
“கடந்த 28 நாட்களாக, நான் ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் இருந்தேன், எனக்கு நிமோனியா இருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவமனையில் நான் தங்கியிருந்த காலத்தில் , ஆரோக்கியமுடன்தான் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என மருத்துவர்கள் விரும்பினர்
.” இன்று, நான் வீட்டிற்கு திரும்பி வருகிறேன் மாய் மற்றும் பாபாவின் ஆசீர்வாதங்கள், எல்லா இடங்களிலும் உள்ள எனது நலம் விரும்பிகள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் பிரார்த்தனைகளும் நல்வாழ்த்துக்களும் பலனளித்தன, ஒவ்வொருவருக்கும் தாழ்மையுடன் வணக்கம்சொல்லிக்கொள்கிறேன்.”எனபதிவுசெய்துஇருக்கிறார்.