சிம்புவின் திரைப்பட வாழ்க்கை ரீ-ஸ்டார்ட் ஆயாச்சு.!
வம்பும் தும்புமாக போய்க் கொண்டிருந்த திரை உலகத்துக்கு ஒரு குட்பை சொல்லிவிட்டு அவரது நிரந்தர இடமாக எப்போதும் இருக்கக்கூடிய முன்னணி நடிகர் வரிசைக்கு சென்று கொண்டிருக்கிறார்.
அதற்கான ஆரம்பம்தான் சபரிமலை யாத்திரை.
அப்பா டி . ஆர். மற்றும் நல்ல நண்பர்களின் மத்தியில் சபரி அய்யப்பனுக்கு இருமுடி கட்டிக் கொண்டு புறப்பட்டிருக்கிறார்.
அவரது நலன் விரும்பிகளாக என்றென்றும் இருந்து வரும் லட்சக்கணக்கான ரசிகர்கள் ,சில இயக்குநர்கள் ,அவரது இந்த மாற்றத்தை பெரிதும் விரும்பி வரவேற்கிறார்கள்.
சிம்புவின் இடத்தை வேறு எவரும் பிடிக்கமுடியாது என்கிற நம்பிக்கையை எதிர்வரும் காலம் உருவாக்கும் என நம்பலாம்.\
சாமியே……..ய் , சரணம் அய்யப்பா!