எந்த உட்டாக இருந்தாலும் சரி அங்கே நடிகைகளுக்கான மரியாதை மறைமுகமாகத்தான் இருக்கும்.
முன்னால் போகவிட்டு பின்னால் இருந்து கொண்டு பேசுவார்கள். “என்னா ஷேப்? நாட்டுக்கட்டை.! சூப்பரா இருப்பா” என உள்ளக்கிடக்கையை மனதோடு பேசிக் கொள்வார்கள்.
சில பெரிய ஆட்கள் தன்னுடைய மானேஜர் வழியாக டீலிங் பேசுவார்கள்.
சினிமாவில் சுத்தம் என்பது கிருமி நாசினி போட்டு கழுவக்கூடிய சங்கதியாகவே இருக்கும்.
இந்த அசிங்கங்களை சில நடிகைகள் தைரியமுடன் சொல்வது உண்டு.
அந்த தைரியசாலிகள் ஒருவர் நித்யாமேனன். ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தில் ஜெ வாக நடிக்கிறார்.
அவர் ஒரு பேட்டியில் மனம் திறந்து சில உண்மைகளைப் பேசியிருக்கிறார்.
“நான் சினிமாவுக்கு எதிர்பாராதவிதமாகத்தான் வந்தேன். சில படங்களுடன் முடித்துக் கொள்ளலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் வாய்ப்புகள் தொடரவே நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கிறது.
சினிமாவில் பெண்களுக்குப் பாதுகாப்பு ரொம்ப ரொம்ப குறைவு.
என்னிடமே சிலர் ஆபாசமாகப் பேசினார்கள். தவறாக நடக்க முயன்றார்கள்.
‘கவுரவமாக நடந்து கொள் ‘என்று கடுமையுடன் சொன்னேன்.எப்படிப்பட்ட கஷ்டங்கள் வந்தாலும் தைரியமுடன் ஊக்கமாக முகத்தில் அறைகிற மாதிரி பேசிவிடவேண்டும்.அப்படி நடப்பதுதான் நமக்கு பாதுகாப்பு ”
இப்படி பேட்டியில் கருத்துகளைப் பதிவு செய்திருக்கிறார்.