ஒவ்வொருத்தன் உலக சாதனையாக என்னவெல்லாமோ பண்ணி பதக்கங்கள் வாங்குகிறான்.
உபி யில் உள்ள ஒரு மிருகம் சொந்த தங்கையின் மகளை 4 வயதானபோதே வல்லுறவு கொண்டு வாழ்ந்து வந்திருக்கிறான். அந்த குழந்தை ஆளாகி தற்போது 40 வயதாகி இருக்கிறது.
“சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம் “என்று பாரதியின் பாடலை முணுமுணுத்துக் கொண்டு போய்விட வேண்டியதுதானா….அல்லது ஜெ..ஜெ பாரதமாதாகி ஜெய் என முனகி விட்டு போய் விட வேண்டியதுதானா…. என்னங்கடா இன்னுமாடா காட்டுமிராண்டிகளாக வாழ்கிறீர்கள்.
அந்த பச்சிளம் குழந்தை மாமனின் காம சேட்டைகள் தொடங்கியபோதே பெற்றவளிடம் சொல்லி இருக்கிறது.
“மாமாதானேடா…வெளையாடி இருப்பான்.”என ச்சொல்லி வாயை அடைத்திருக்கிறாள் அந்த பாரதமாதா புத்திரி, .
அந்த சிறுமி 10 ஆம் வகுப்பை தொட்டபோது 4 முறை அபார்ஷன் செய்து கொண்டிருக்கிறாள்.1983 -ல் தொடங்கிய காமக்கொடூரன் மாமனின் வன்முறை தாங்காமல் அம்மாவிடம் சொன்னபோது “வெளியில் சொல்லாதே… கொன்னுடுவேன்.”என மிரட்டல்.
ஒரு எல்லை உண்டல்லவா? 2016-ல் போலீசில் புகார் செய்து எப்.ஐ,ஆர். போட்டார்கள். வழக்கு இன்னும் முடிந்த பாடில்லை.