பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் சிறுபான்மையினராக இருந்து, இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ளவர்களுக்குக் குடியுரிமை அளிக்கும் வகையில், குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த திருத்த மசோதாவில் இலங்கைப் படுகொலையில் இருந்து தப்பி வந்த தமிழர்கள்,முஸ்லிம்கள் இடம் பெறவில்லை. அதாவது தமிழ் ஈழத்தமிழர்கள் முழுமையாக அநாதைகளாக மாற்றப்படப்போகிறார்கள்.
இந்த மசோதாவுக்கு தமிழக எடப்பாடி அரசு ஆதரவு அளித்திருக்கிறது. சிங்களர்களால் எப்படி தமிழர்கள் வதை பட்டார்களோ அதைப்போல அதிமுக அரசினால் இனி வதை படுவார்கள். எடப்பாடியின் தமிழர் விரோதப்போக்கினை நடிகர் சித்தார்த் கடுமையாக கண்டித்திருக்கிறார்.
“எடப்பாடி பழனிசாமி என் மாநிலத்துக்கும் நம் மக்களுக்கும் பிரதிநிதியாக இருக்கிறார் என்பது மிகவும் வெட்கமாக இருக்கிறது.
குடியுரிமை திருத்த மசோதாவுக்கு ஆதவளித்ததன் வழியாக அவருடைய சுயரூபமும், நேர்மையின்மையும், என்ன நடந்தாலும் பதவி முக்கியம் என்கிற ஆசையும் வெளிப்பட்டுள்ளது.
நீங்கள் அனைவரும் இதற்குப் பொறுப்பு.. அதுவரை உங்கள் பதவியை ரசித்து அனுபவியுங்கள். ஜெயலலிதா ஒருபோதும் குடியுரிமை திருத்த மசோதாவை ஆதரித்திருக்க மாட்டார். அவர் இல்லாமல் அதிமுக தனது நெறிமுறைகளிலிருந்து எப்படியெல்லாம் சீரழிந்திருக்கிறது !”என பதிவு செய்திருக்கிறார்.